Advertisment

ஒருவழியாக ‘கருப்பு’ ரிலீஸ் அப்டேட்டை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!

12 (36)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் அதே மாதமும் வெளியாகியிருந்தது. டீசரில் சூர்யா இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். அடுத்ததாக படத்தின் முதல் பாடல் ‘காட் மோட்’ வெளியாகியிருந்தது. ஆனால் பட ரிலீஸ் குறித்து நீண்டகாலமாக எந்த அறிவிப்பும் இல்லாமல் இழுபறி நீடித்தது. படக்குழு பல்வேறு தேதிகளை புக் செய்தும் டிஜிட்டல் விற்பனையாகாததால் இந்த தாமதம் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisment

பட ரிலீஸ் குறித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி படத்தின் இரண்டாவது பாடலுடன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பட ரிலீஸ் குறித்து மீண்டும் பேசியுள்ளார். கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், “படம் முடிந்து விட்டது, ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. படம் ரிலீஸாவதற்கு முன், நாம் பயங்கரமாக பில்டப் கொடுத்து பேசி ரிலீஸுக்கப்புறம் அது வேற மாதிரி இருந்தால் செம்ம அடி அடிக்கிறாங்க. நான் எப்போதுமே கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புவேன். 

ஒரு படத்துடன் நாம் போகப்போவதில்லை. அதனால் உண்மையை சொன்னால் அடுத்த முறை பேசும்போதும் நம் பேச்சை நம்புவார்கள். அதனால் கருப்பு படம் ரொம்ப நல்லா இருக்கும். உங்க எல்லாருக்கும் பிடிக்கும். வலிமை அப்டேட் போல் கருப்பு அப்டேட்டை ஒரு வருஷமா கேட்குறாங்க. படம் சம்மரில் தேர்தலுக்குப் பிறகுதான் ரிலீஸாகும். எப்போது வந்தாலும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோட வந்து பார்க்கலாம்” என்றார். 

Karuppu actor suriya RJ Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe