Advertisment

ரஜினி குறித்து ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த ஆச்சரிய தகவல்

15 (68)

சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படத்தை இயக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அதன் பணிகளை கவனித்து வரும் அவர் தொடர்ச்சியாக கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தொடங்கியிருக்கிறார். கடைசியாக கலந்து கொண்ட ஒரு கல்லூரி நிகழ்வில் கருப்பு பட ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். அதாவது வரும் தேர்தல் முடிந்த பின்பு தான் படம் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.  

Advertisment

அந்த வகையில் தற்போது கலந்து கொண்ட ஒரு கல்லூரி நிகழ்வில், இன்ரைய இளைஞர்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய டீமில் 22, 23 வயசில் அசிஸ்டண்ட் டைரக்டரா, ரைட்டரா வேலைக்கு வராங்க. மூணு, நாலு மாசத்துல டையர்ட் ஆகிட்ராங்க. என்னடான்னு கேட்டா, பயங்கர ஸ்ட்ரெஸ்ஸா இருக்குன்னு சொல்றாங்க. அது போல என்னுடைய 14 வயசு பையனும் இதையே தான் சொல்றான். இந்த சமயத்துல தான் ரெண்டு மூணு மாசம் முன்னாடி ரஜினி சாரை பார்த்தேன். நாம எல்லாருக்குமே தெரியும் அவர் எவ்வளவு பெரிய மனுஷன்னு. 

Advertisment

அவர் கூட பேசும்போது, அடுத்த 5 வருஷத்துக்கு அவரோடைய பிளானை சொன்னார். அது ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்துச்சு. 75 வயசுல ஒரு மனுஷன் அடுத்து என்னென்ன பண்ணனும்னு 50 வருஷம் முன்னால எப்புடி ஆர்வமா இருந்தாரோ அதே ஆர்வத்தோட இப்பவும் இருக்கார். அதனால இன்றைய தலைமுறையினர் இந்த ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையை ஓரமா தூக்கி எறியுங்க. ரஜினி போல் நாமும் பண்ண முடியும்” என்றார். 

Actor Rajinikanth RJ Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe