தொகுப்பாளராக பிரபலமாகி சின்னத்திரையில் நடித்து பின்பு வெள்ளித்திரையில் பயணித்து வருபவர் ரியோ ராஜ். நாயகனாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பிளான் பண்ணி பண்ணனும், ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் உள்ளிட்ட இன்னும் இரண்டு படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பபை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றது. 

Advertisment

இப்படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ராம் இன் லீலா’ என தலைப்பு வைத்துள்ளனர். டிரடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ‘ஈ ஒய் டபள்யூ ஏ என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றன. ராமச்சந்திரன் கண்ணன் இப்படத்தை இயக்க, வர்த்திக்கா ஜெயின் நாயகியாக நடிக்கிறார். இசை அன்கித் மேனன். 

Advertisment

போஸ்டரை பார்க்கையில் காதல் பின்னணியில் கலகலப்பான காமெடி படமாக உருவாகுவது போல் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் நாயகன் பெயர் ரியோ என்று மட்டும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக ஆண்பாவம் பொல்லாதது பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின், ரியோ ராஜ் என்ற பெயரை ரியோ என மாற்றிக் கொள்ளலாம் என அறிவுரை கூறியிருந்தார். அதை ஏற்றுக் கொண்ட ரியோ தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.