Advertisment

திரில்லாக இருந்ததா? - 'தி ஸ்மைல் மேன்' விமர்சனம்!

the Smile Man movie review

Advertisment

சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் நல்ல ஒரு கிரைம் திரில்லர் படமாக அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்பொழுது அதே போன்ற மற்றும் ஒரு மர்டர் மிஸ்டரி கிரைம் திரில்லர் வகையில் இந்த தி ஸ்மைல் மேன் படம் வெளியாகி இருக்கிறது. சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் போர் தொழில் போன்றே வரவேற்பை பெற்றதா, இல்லையா?.

சிஐடி ஆபீசர் சரத்குமாரோடு தொடர்பில் இருக்கும் நபர்கள் தொடர்ந்து ஒரு சீரியல் கில்லரால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த கொலைகாரனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சி ஐ டி ஆபீசர் சரத்குமார் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து வருடக்கணக்கில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்சைமர் நோய் பாதிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சீரியல் கில்லரை பிடிக்க வேறு ஒரு ஆபிஸர் நியமிக்கப்படுகிறார். அவர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சரத்குமாரை உதவிக்கு அழைக்கிறார். இருவரும் கொலையாளியை துப்புத் தொலைக்க ஆரம்பிக்கின்றனர். முடிவில் அந்த தி ஸ்மைல் மேன் சீரியல் கில்லரை இவர்கள் பிடித்தார்களா, இல்லையா? என்பதை மீதி கதை.

நாம் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய அதே சீரியல் கில்லர் பாணியான ஒரு திரைப்படம். தொடர் கொலைகள் நடக்கிறது அதை ஒரு போலீஸ் ஆபீஸர் கண்டுபிடிக்கிறார். இந்த ஒரு அரதப் பழையடெம்ப்ளேட்டை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைக்க முயற்சி செய்து அதன் மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஷியாம் பிரவீன். பொதுவாக திரில்லர் படங்கள் என்றாலே ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன என்பதை கண்டுபிடிக்காத படி திரைக்கதை அமைந்து அதற்கு ஏற்றார் போல் காட்சி அமைப்புகளும் அமைந்து விறுவிறுப்பான கதையோட்டம் இருக்கும் பட்சத்தில் அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும். ஆனால் இந்த படமும் அதில் சற்றே பின் தங்கி விறுவிறுப்பான திரைக்கதை மட்டும் இல்லாமல் ஸ்லோ அன் ஸ்டெடியாக நகர்ந்து பார்ப்பவர்களை ஆங்காங்கே ரசிக்கவும் சோதிக்கவும் வைத்திருக்கிறது.

Advertisment

கதையும் கதாபாத்திரங்களும் கதையை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்தாலும் காட்சிகளில் ஏனோ அயர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் ஒரு திரில்லர் படங்களுக்கே உரித்தான கிரிப்பிங் ஆன ஸ்லோ காட்சிகள் பார்ப்பதற்கு சற்றே ரசிக்கும் படியும் இருப்பது படத்திற்கு சற்று பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அவை ஓரளவு ரசிக்கும்படி இருப்பது படத்தை கரை சேர்க்க முயற்சி செய்ய உதவி இருக்கிறது. ஒரு சீரியல் கில்லர் கதாபாத்திரத்தை திரில்லிங்காக உருவாக்கிய இயக்குநர் திரைக்கதையிலும் அதே திரில்லிங்கைகொடுத்திருந்தால் இன்னமும் வரவேற்பை பெற்று இருக்கும்.

வழக்கமான சரத்குமாராக இல்லாமல் மிகவும் அமைதி வாய்ந்த அழுத்தமான சரத்குமார் ஆக இந்த படத்தில் மிளிர்கிறார். போலீஸ்காரருக்கு உரித்தான மிடுக்கை இன்னமும் தன்னுடைய உடலமைப்பில் காட்டும் சரத்குமார் நடிப்பில் வேறு ஒரு பரிணாமம் காட்டி இருக்கிறார். படத்தின் நாயகியாக வரும் இனியா சில காட்சிகளில்வந்தாலும் வந்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகுமார் படம் முழுவதும் வருகிறார் கொடுத்த வேலை செய்திருக்கிறார். மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் சிஜா ரோஸ் அவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். சிறுமி பேபி ஆலியா சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சுரேஷ் சந்திர மேனன், ஜார்ஜ் மரியான் உட்பட சிலர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

விக்ரம் மோகன் ஒளிப்பதிவில் மர்டர் மற்றும் அதை சுற்றிய இரவு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஜீஷ் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி இசை சிறப்பு. க்ரைம் மர்டர் திரில்லர் திரைப்படங்களுக்கு திரைக்கதை வேகம் எவ்வளவு முக்கியம் என்பதை இதற்கு முன்பு வெளியான வெற்றி படங்களை எடுத்துக்காட்டாக பார்த்தாலே தெரிந்து விடும். அந்த அளவு ஒரு ஸ்கிப்பிங் ஆன திரில்லர் படங்களை மக்கள் எப்பொழுதுமே நல்ல வரவேற்பை கொடுத்து ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த ஸ்மைல் மேன் திரைப்படம் திரைக்கதை வேகம் சற்று ஸ்லோ அன் ஸ்டெடியாக இருப்பது ஓரளவுக்கு ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது.

ஸ்மைல் மேன் - திரில்லர் குறைவு!

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe