அவ்வப்போது வந்து கான்ட்ரவர்ஸியை கிரியேட் செய்து கொண்டிருக்கும் பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தற்பொழுது படத் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். இவர் தயாரித்து இயக்கி நாயகியாகவும் நடித்திருக்கும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் தற்பொழுது ரிலீஸ் ஆகி இருக்கிறது. எப்பொழுதும் கான்வர்சியாகவே கண்டன்டுகளை கொடுத்துப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார் இந்த படம் மூலம் எந்த மாதிரியான கான்வர்சியை கிரியேட் செய்திருக்கிறார்? என்பதைப் பார்ப்போம்...

ராபட்டும் வனிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தாய்லாந்தில் இருக்கும் பாங்காக்கில் வாழ்ந்து வருகின்றனர். ராபர்ட்டுக்கு 45 வயது வனிதாவுக்கு 40 வயது இருவரும் அங்கிள் ஆன்ட்டியாக இருக்கும் இந்த சமயத்தில் திடீரென வனிதாவிற்குத் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த வயதில் வேண்டாம் என ராபர்ட் மறுக்கிறார். இருந்தும் வனிதா விடாப்பிடியாக எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். இதைத்தொடர்ந்து எடுத்த முயற்சியில் வனிதா வெற்றி பெற்றாரா, இல்லையா? இந்த அங்கிள் ஆன்ட்டி தம்பதிக்குக் குழந்தை பிறந்ததா, இல்லையா? இந்த குழந்தை விஷயத்தால் இவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

40 வயது கடந்த ஒரு பெண்ணிற்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வர அப்பொழுது அவர் சந்திக்கும் சிக்கல்கள், அவர் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள், சுற்றி இருக்கும் சமூகத்தின் அழுத்தங்கள் என அவர் சந்திக்கும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்ட இயக்குநர் வனிதா விஜயகுமார் அதை அடல்ட் கன்டென்ட் மூவியாக கொடுத்து சற்று முகம் சுளிக்கும் படியான ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இக்கால இளைஞர்கள் மத்தியில் வேண்டுமானால் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண் ரசிகைகள் ஆகியவர்களுக்கு இந்த படம் சற்றே அன்னியமாகவே தெரிகிறது. படம் முழுவதும் ஆரம்பம் முதல் இறுதி வரை அடல்ஸ் ஒன்லி விஷயங்கள் நிறைந்து காணப்படுவதும் அவை பல இடங்களில் சற்றே முகம் சுளிக்கும்படி இருப்பதும் படத்திற்குப் பாதகமாக அமைந்திருக்கிறது. 

அதேசமயம் நல்ல கதையை வைத்துக்கொண்டு அதற்கு அமைத்திருக்கும் திரைக்கதை ஏனோ மிகவும் சினிமா தனமாக இருப்பதும் படத்திற்கு இன்னமும் மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் இவை அனைத்தையும் தாண்டி வனிதாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் அது கெமிஸ்ட்ரி ஆங்காங்கே வரும் அடல்ட் காமெடிகள் ரசிக்கும் வைக்கும் படி இருப்பது படத்தை ஓரளவு காப்பாற்றி இருக்கிறது. அடுத்த அடுத்த காட்சிகள் யூகிக்கும்படி அமைந்திருந்தாலும் கலகலப்பாகவும் நேர்த்தியாகவும் நகரும் திரைப்படம் அயற்சி தருவதைக் குறைத்து இருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. அதேபோல் படம் எடுத்த விதத்திலும் நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருப்பது படத்திற்கு இன்னொரு பிளஸ் சாக அமைந்திருக்கிறது. 

Advertisment

40 வயதைக் கடந்தும் ரொமான்டிக் காட்சிகள் மற்றும் அம்மாவாகத் துடிக்கும் இயக்கம் அதற்கு அவர் செய்யும் தகடு திட்டங்கள் போன்ற கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். படத்தின் நாயகியாக இருக்கும் அவர் படம் முழுவதும் அதிக நேரம் அவரே தென்படுகிறார் அதற்கு ஏற்றார் போல் நேர்த்தியான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இவருக்கும் ராபர்ட்டுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நாய் கனவாக வரும் ராபர்ட் மாஸ்டர் எதார்த்தமான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவரது ஒன் லைன் பஞ்ச் காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. அதேசமயம் இவருக்கும் அனிதாவுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கிறது. 

வனிதாவின் அம்மாவாக வரும் சகிலா தெலுங்கு பேசிக்கொண்டு நடிக்கும் காட்சிகள் சிறப்பாக நடித்து நன்றாக காமெடி செய்திருக்கிறார். கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் மிகச் சிறப்பாகப் பொருந்தி நேர்த்தியான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது மற்றொரு மகளாக வரும் நடிகை ஆர்த்தி அவரது வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். வனிதாவின் மாமாவாக வரும் கணேஷ் கரும். அவரை வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். வனிதாவின் இன்னொரு மாமாவாக வரும் ஸ்ரீமன் இறுதிக் கட்ட காட்சிகளில் சென்டிமென்டாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர் அவர்கள் அவரவர் வேலைகளைச் சிறப்பாகச் செய்து கவனம் பெற்று இருக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. டிஜி கப்பில் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. வெளிநாடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி. ராஜேந்தர் போல் நடிப்பு இயக்கம் தயாரிப்பு என அனைத்து துறையிலும் தானே முழுமையாக இன்வால்வாகி அதைச் சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்ற வனிதா விஜயகுமார் ஏனோ திரைக்கதையில் சற்றே கோட்டை விட்டு இருக்கிறார். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வனிதா விஜயகுமார் அதில் நிறைய அடல்ட் கன்டென்டுகளை உட்புகுத்தி பல்வேறு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தாலும் இந்த கால இளைஞர்கள் மட்டும் ரசிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். 

Advertisment

மிஸஸ் அண்ட் மிஸ்டர் - காரம் தூக்கல், ருசி குறைவு!