Advertisment

கதைக்குள் கதையா? - ‘மெட்ராஸ் மேட்னி’ விமர்சனம்!

madras matinee review

Advertisment

குடும்பம் சூழல், வாழ்க்கை ,மனித நேயம் போன்ற விஷயங்களை தற்போது மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இணைய அந்த மாதிரியான ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு ரிலீஸ் ஆகி இருக்கும் திரைப்படம் இந்த மெட்ராஸ் மேட்னி. இது எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற்றதா, இல்லையா?

பெரிய கதை ஆசிரியராக இருக்கும் சத்யராஜ் தான் அடுத்ததாக எழுதப் போகும் கதையைத் தேடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு மதுபான பாரில் காளி வெங்கட்டைச் சந்திக்கும் அவர் காளி வெங்கட் வாழ்க்கையை கதையாக எழுத முடிவு எடுக்கிறார். அப்போதிலிருந்து அவர் கதையை சத்யராஜ் சொல்ல ஆரம்பிக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆட்டோ டிரைவரான காளி வெங்கட் மனைவி மகனோடு வாழ்ந்து வருகிறார். தன் குடும்பத்தை காப்பாற்ற அன்றாடம் ஓடி உழைத்துக் கொண்டு கடன்காரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு கிடைக்கின்ற சிறிய பணத்தில் நிறைவான வாழ்க்கையை வாழ முயற்சி செய்து கொண்டு தன் வாழ்க்கையை பல்வேறு துயரங்களுக்கு இடையே வாழ்ந்து வருகிறார்.

இவரது மகள் ரோஷினி இவர்கள் குடும்பம் படும் கஷ்டத்தை உணர்ந்து பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் அங்கிருந்து ஆன் சைட்டில் அமெரிக்கா செல்வதற்காக முயற்சி செய்து இருக்கிறார். அது அவருக்கு கை கூடியதா, இல்லையா? பிரிந்த பெற்றோருடன் அவர் ஒன்று சேர்ந்தாரா, இல்லையா? காளி வெங்கட்டின் குடும்பம் நிலை மேம்பட்டதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

Advertisment

லோயர் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் வாழும் ஒரு குடும்பத்தினுடைய வாழ்வியலை சத்யராஜின் வாய்ஸ் மூலமாக அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி. ஒரு படத்திற்கான சோ கால்ட் ஸ்கிரீன் ப்ளே இல்லாமல் அப்படியே நம் பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி பார்க்கும் சம்பவங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். இதில் திரைக்கதைக்கு அவசியமான இன்ட்ரொடக்ஷன், மிட் பாயிண்ட், கிளைமாக்ஸ் போன்ற அடிப்படை விஷயங்கள் எதுவும் இல்லாமல் பிளாட்டான ஒரு குடும்ப கதையை கொஞ்சம் மிஸ் ஆனாலும் சீரியல் போல் ஆகிவிடும் கதைக்களத்தை நேர்த்தியாக கொடுத்து பார்ப்பவர்களை நிறைவான ஒரு படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார்.

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அடுத்தடுத்து என்ன நடக்க போகும் என்ற காட்சிகள் முன்கூட்டியே எதிர்க்கும் படி இருப்பதாலும், அதே சமயம் சத்யராஜ் நடுநடுவே வந்து கதை சொல்லும் விதத்தாலும் படம் ஆங்காங்கே சற்றே அயர்ச்சி ஏற்படும்படி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் கதை மாந்தர்களின் நடிப்பும் கதை சொன்ன விதமும் கதைக்களமும் நாம் நம் வாழ்வியலுக்கு நெருக்கமானவர்களை கண் முன் பார்ப்பது போல் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக மாறி படத்துடன் நம்மை ஒட்ட வைக்கிறது.

வழக்கம்போல் சத்யராஜ் தனது நக்கல் நையாண்டியுடன் கதை சொல்ல ஆரம்பித்து படம் முழுவதும் வாய்ஸ் ஓவரில் வந்து அவ்வப்போது காட்சிகளிலும் தோன்றி விட்டு சென்று இருக்கிறார். நாயகன் காளி வெங்கட் வழக்கம் போல் தனது திறமையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இவரது எதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு வழி சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறது. இவரது மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர் நடுத்தர குடும்பத்தில் உள்ள ஹவுஸ் வைஃப்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். கிட்டத்தட்ட காளி வெங்கட்டுடன் போட்டி போட்டு கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். காளி வெங்கட் மகளாக வரும் ரோஷினி ஹரிப்ரியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.

காளி வெங்கட் மகனாக வரும் விஷ்வா படுத்த மேனிக்கே இருக்கிறார், அவ்வப்போது எழுந்து கேம் விளையாடுகிறார், ஒரு காட்சியில் சண்டை போட்டு புரண்டு அழுகிறார். இன்றைய 2k இளைஞர்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியான், பிக் பாஸ் மதுமிதா, சம்ஸ், அர்ச்சனா மற்றும் சுனில் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.

பால சாரங்கன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனந்த் ஜி கே ஒளிப்பதிவில் வீடு மற்றும் அதை சுற்றி நடக்கும் காட்சிகள் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.சினிமாவுக்கே உரித்தான எந்த ஒரு பிரின்சிபலையும் கடைபிடிக்காமல் திரைக்கதை அமைத்து போற போக்கில் குடும்பத்தில் நடக்கும் ஒரு எமோஷனல் குடும்ப கதையாக இந்த படத்தை காட்டி இருக்கும் இயக்குனர் அதில் நடித்திருக்கும் கதை மாந்தர்களின் நடிப்பின் மூலம் படத்தை எலிவேட் செய்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இருந்தும் திரைக்கதையில் இன்னமும் வேகத்தை கூட்டி கதைக்கும் இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக இருந்திருக்கும்.

மெட்ராஸ் மேட்னி - ஆல்மோஸ்ட் ஹவுஸ் ஃபுல்!

kaali venkat moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe