Advertisment

மீண்டும் மெய்சிலிர்க்க வைத்ததா? - ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ விமர்சனம்

89

கடந்த 2022ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் காந்தாரா திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கி இருந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்து வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாவது பாகமாக காந்தாரா ப்ரீக்குவல் படமாக இந்த ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. முந்தைய காந்தாராவின் மாபெரும் வெற்றியின் காரணமாக இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே எந்த அளவு வரவேற்பை பெற்று இருக்கிறது? 

Advertisment

முந்தைய பாக இறுதி கட்டத்தில் நாயகன் எப்படி தெய்வமாக மாறி மறைகிறார் என்பது போன்று படம் முடிந்திருக்கும். அவர் எப்படி மறைந்தார்? காந்தாரா தெய்வத்தின் கதை என்ன? என ஒரு சிறுவனுக்கு சொல்லப்படும் படி இந்த படத்தின் கதை ஆரம்பிக்கிறது. கதை முன்னோர்கள் காலத்திற்கு செல்கிறது. அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு காடு மலை கொண்ட காந்தாரா காட்டு பகுதியில் இரண்டு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் காந்தாரா பழங்குடியின மக்கள் சிவனை லிங்கமாக வழிபடுகின்றனர். அந்தப் பகுதியும் இருக்கும் மக்களுக்கு தெய்வ சக்தி பெருந்துணையாக இருக்கிறது. அதேபோல் அங்கு பல்வேறு விதமான வளங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. பல்வேறு பழங்கள், மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற வாசனை உணவுப் பொருட்கள் அங்கு விளைகிறது. அதை வைத்துக்கொண்டு அங்கு இருக்கும் காந்தாரா மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பேணி காத்து வருகின்றனர். அதை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்றும் அதே போல் அந்த இடத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதியில் இருக்கும் பாங்க்ரா ராஜ்யத்தின் விஜேந்திர மன்னன் முயற்சி செய்கிறார்.

Advertisment

91

இன்னொரு புறம் அதே காட்டுப்பகுதியில் வசிக்கும் மற்றொரு பழங்குடியின மக்களான பிஞ்சரலா பழங்குடியின மக்கள் சாத்தானை வழிபட்டு சூனியம் செய்து தெய்வ சக்தியை தங்கள் வசப்படுத்தி காந்தாராவையும் தங்கள் வசப்படுத்த முயற்சி செய்கின்றனர். காந்தாரா மக்களோ தங்களிடம் இருக்கும் வளத்தை பக்கத்தில் இருக்கும் பாங்கரா ராஜ்யத்தில் உள்ள துறைமுகத்தில் வியாபாரம் செய்து அதன் மூலம் பண்டமாற்று முறையில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி அவர்கள் வசிக்கும் காந்தாரா பகுதியை நாகரீகமாக மாற்ற வேண்டும் என முயற்சி செய்கின்றனர். அதற்கு தெய்வ சக்தி கொண்ட நாயகன் ரிஷப் ஷெட்டி தலைமை தாங்குகிறார்.

அவரது தலைமையில் காந்தாரா மக்கள் விவசாயம் செய்து விளைவிக்கும் பொருட்களை பக்கத்தில் இருக்கும் துறைமுக நகரத்தில் கொண்டு போய் விற்று பொருளாக மாற்றிக் கொள்கின்றனர். அதற்கு தடையாக விஜயேந்திர மன்னன் ஜெயராம் மகன் குல்ஷன் தேவைய்யா இருக்கிறார். அவருக்கும் நாயகனுக்கு மன மோதல் வெடிக்கிறது. இதனால் ஜெயராம் மகன் குல்ஷன் தேவைய்யா கோபமடைந்து காந்தாராவை தன் வசப்படுத்த ஆட்களுடன் காட்டுக்குள் சென்று ஆக்கிரமிக்கிறார். இன்னொரு பக்கம் பிஞ்சிரலா பழங்குடியின மக்களுடன் சேர்ந்து கொண்டு ஜெயராம் மற்றும் அவர் மகள் ருக்மணி வசந்த் ஆகியோர் சூனியம் செய்து தெய்வ சக்தியை அடக்கி காந்தாராவை கைப்பற்ற படையெடுக்கின்றனர். இவர்களிடமிருந்து காந்தாராவை நாயகன் ரிஷப் ஷெட்டி காப்பாற்றினாரா, இல்லையா? காந்தாரா தெய்வம் எப்படி உருவானது? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

90

முந்தைய காந்தாராவை போல் இந்த படத்தையும் விறுவிறுப்பான அதேசமயம் ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி அதனுள் ஆன்மிகத்தையும் மெய்சிலிர்க்கும் படி சரிவர சேர்த்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தி படத்தையும் வெற்றி பெற செய்து கரை சேர்த்திருக்கிறார் இயக்குநரரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி. படத்தின் முதல் பாதி கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது போகப் போக தெய்வ பக்திக்குள் செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் மந்திரம் மாயம் மாந்திரீகம் என கடந்து விறுவிறுப்பான பேண்டஸி கலந்த ஆக்சன் திரைப்படமாக முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. முழுக்க முழுக்க பழங்குடியின மக்கள் வாழ்வியலை அப்படியே ஹாலிவுட் படமான அப்போகலிப்டோ பாணியில் சிறப்பான முறையில் அதே சமயம் பிரம்மாண்டமான முறையில் உலகத்தரம் வாய்ந்த படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. குறிப்பாக படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் சிறப்பாக அமைந்து அதுவே படத்திற்கு பக்கபலமாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அதே போல் திரைக்கதைக்கும் சிறப்பான முறையில் முக்கியத்துவம் அளித்திருக்கும் இயக்குநர் அதை நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பான படமாக இந்த காந்தாரா படத்தை கொடுத்திருக்கிறார். அதேசமயம் முழுக்க முழுக்க ஆன்மீக படமாகவும் இல்லாமல் மக்கள் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான படமாகவும் இப்படத்தை கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்கள் ரசிக்கும் படியும் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன்னட சினிமாவிலிருந்து மற்றும் ஒரு பிளாக்பஸ்டர் பான் இந்தியா திரைப்படமாக இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அமைந்திருக்கிறது.

93

படத்தில் ஆங்காங்கே பல இடங்களில் சலிப்பு ஏற்படும்படியான காட்சி அமைப்புகள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திரைக்கதை அமைப்பும் ஆங்காங்கே தென்படத்தான் செய்கிறது. அதற்கேற்றார் போல் படத்தின் நீளமும் அதிகமாக இருந்து சில இடங்களில் அயர்சியை கொடுக்கிறது. இருந்தும் இதை அனைத்தையும் மறக்கடிக்க செய்து தான் சொல்ல வந்த விஷயத்தை சிறப்பான முறையில் தரமான மேக்கிங்குடன் சொல்லி மைனஸ் விஷயங்களை மறக்க அடிக்கச் செய்து குடும்பத்துடன் சென்று பார்க்கும் படியாக ஒரு நல்ல படமாக காந்தாராவை இயக்குநர் கொடுத்திருக்கிறார். இது பிளஸ் ஆக அமைந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறது. 

நாயகன் ரிஷப் ஷெட்டி வழக்கம்போல் தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து அதேசமயம் இயக்கத்தையும் சிறப்பான முறையில் செய்து மீண்டும் ஒருமுறை ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். நாயகனாக இவர் வரும் காட்சிகளில் சிறப்பான முறையில் நடித்து அதற்கேற்றார்போல் உடல் வாகையும் சிறப்பான முறையில் வைத்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கு பக்கபலமாக நாயகி ருக்மிணி வசந்தும் வழக்கமான நாயகியாக இல்லாமல் சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ருக்மணி வசந்தின் திருப்புமுனை காட்சிகள், படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் ஜெயராம் தனக்கு கொடுத்த வேலையை வழக்கம் போல் சிறப்பாக செய்து இருக்கிறார். அவரது மகன் குல்ஷன் தேவைய்யா எரிச்சல் ஊட்டும் வில்லன் வேடத்தில் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து இருக்கிறார்.

அதேபோல் நகைச்சுவைக்கு பொறுப்பேற்று நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பான முறையில் நடித்து எந்தெந்த இடங்களுக்கு எவ்வளவு காமெடி வேண்டுமோ அதை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கின்றனர். படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களாக நாயகனுடன் சேர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து பார்ப்பவர்களை சிரிக்கவும் வைத்து ரசிக்கவும் வைக்க வைத்திருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர்.

88

அரவிந்த் கே காஷ்யப் ஒளிப்பதிவில் படம் உலகத்தரம். இவரது சிறப்பான ஒளிப்பதிவு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கிட்டத்தட்ட ஹாலிவுட் லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. மேக்கிங்கில் மிகுந்த கவனமாக இருந்த படக்குழு அதை கேமராவிலும் சிறப்பான முறையில் கொடுத்து இருக்கிறது. இந்த படத்தின் மேக்கிங்குக்கு கேமரா மிகப்பெரிய பங்கு அளித்திருக்கிறது. அதுவே படத்திற்கு பெரிய பிளஸ் ஆகவும் மாறியிருக்கிறது. அஜனீஸ் லோக்நாத் இசையில் வழக்கம் போல் காந்தாராவின் அக்மார்க் தீம் மியூசிக் பார்ப்பவர்களுக்கு மறுபடி மறுபடி பரவசத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் 10 நிமிட காட்சிகள் கூஸ் பம்ப்ஸ். படம் முழுவதும் இவரது இசை பல இடங்களில் படத்தை எலிவேட் செய்து படத்தையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரது சிறப்பான இசை படத்தை பலதரப்பட்ட மக்களிடம் எடுத்துச் சென்று இருக்கிறது. 

படம் ஆரம்பித்தில் சற்றே ஜனரஞ்சகமாக நகரும் திரைப்படம் சில இடங்களில் அயர்ச்சியையும் சில இடங்களில் நெளியவும் வைப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் படத்தில் சொல்லப்பட்ட விஷயம் மற்றும் மேக்கிங் ஆகியவை படத்துடன் நம்மை ஒன்றை வைத்து குறிப்பாக இரண்டாம் பாதியில் இருந்து சிறப்பான முறையில் வேகம் எடுத்து கிளைமாக்ஸில் மெய் சிலிர்ப்பை உண்டாக்கி பரவசத்தை கொடுக்கிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். 

‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ - சிலிர்ப்பு!

Movie review Kantara 2 Rishab shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe