Skip to main content

மாட்டியது பிரியா பவானி ஷங்கர் மட்டும் இல்லை! - ஹாஸ்டல் விமர்சனம்

hfxfdxxd

 

வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக உருவெடுத்து வரும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு திரைப்படம். இந்த தடவை புதிய கதையாக இல்லாமல் மலையாளப் படத்தின் ரீமேக்கை கையில் எடுத்துள்ளார். இளைஞர்களை கவர்வதற்காக டபுள் மீனிங் வசனங்களோடு வெளியான இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வரவேற்பு இப்படத்திற்கும் கிடைத்ததா...?

 

அசோக் செல்வன், சதீஷ் உட்பட அவரது கல்லூரி நண்பர்கள் தங்கியிருக்கும் ஆண்கள் ஹாஸ்டலில் நாயகி பிரியா பவானி சங்கர் இரவோடு இரவாக நுழைகிறார். அவரை அடுத்த நாள் எவர் கண்ணிலும் படாமல் வெளியே அனுப்ப அசோக் செல்வன் அண்ட் குரூப் முயற்சி செய்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனரா, இல்லையா என்பதே ஹாஸ்டல் படத்தின் மொத்த கதை.

 

hhfdhdfhdhjdfhj

 

இந்த ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு மலையாளத்தில் வெற்றிப்படமாக கொடுத்தனர். அதனாலேயே இந்தப் படம் தமிழிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சில இரட்டை அர்த்த வசனங்களோடு இப்படத்தை உருவாக்கி அதை ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் வகையில் கொடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகள் பலன் கிடைத்ததா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே! எல்லா படங்களிலும் காட்டிய அதே மாதிரியான பழைய ஹாஸ்டல், அதே பழைய டைப்பில் ஒரு வார்டன், அதே பழைய டைப்பில் வார்டனுக்கு ஒரு அசிஸ்டன்ட், நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய அதே க்ளிஷேவான காட்சிகள், அதே குடியும் கும்மாளமுமாக அட்டகாசம் செய்யும் மாணவர்கள் என இத்தனை வருடங்கள் அரைத்த மாவையே இதிலும் அரைத்துள்ளார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். எந்த ஒரு காட்சியும் பிரஷ்ஷாக இல்லாமல் அதே பழைய பாணியை பின்பற்றி அதில் ஆங்காங்கே சில காமெடிகளை புகுத்தி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவை பெரும்பாலும் படத்திற்கு சாதகமாக அமையாமல் பாதகமாகவே அமைந்து உள்ளது. இருந்தும் படத்திற்கு ஒரே பிளஸ் ஆக ஆங்காங்கே சில இடங்களில் முனீஸ்காந்த் மற்றும் ரவிமரியாவின் காட்சிகள் காமெடியாக அமைந்து சிரிக்க வைத்துள்ளன. 

 

ஒரு நல்ல ஃப்ளோவில் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் எதன் அடிப்படையில் இப்படத்தை தேர்வு செய்தார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒரு கதையாகவோ அல்லது திரைக்கதையாக எதிலும் புதுமை இல்லாத இப்படத்தில் தனக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளார் அசோக் செல்வன். அதிகம் நடிப்புக்கு ஸ்கோப் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் நாயகி பிரியா பவானி சங்கர். படத்தில் பாதி நேரம் கட்டிலுக்கு அடியிலேயே ஒளிந்து கொள்கிறார்.

 

bfxbfdsbx

 

ஹாஸ்டல் வார்டனாக வரும் நாசர் ஸ்ட்ரிக்டாக இருந்து நகைச்சுவை செய்ய முயற்சி செய்துள்ளார். இவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் முனீஸ்காந்த் சில காட்சிகளில் சொதப்பினாலும் பல காட்சிகளில் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டி உள்ளார். இவருடன் இணைந்து ரவி மரியாவும் தன் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார். அசோக் செல்வன் நண்பர்களாக வரும் சதீஷ், கேபிஒய் யோகி, கிரிஷ் குமார் ஆகியோர் கடமைக்கு வந்து சென்றுள்ளனர். வழக்கமான காமெடி பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா சில இடங்களில் சிரிக்க வைக்கவும் பல இடங்களில் சோதிக்கவும் செய்துள்ளார்.

 

பிரவீன்குமார் ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் இரவு நேரக் காட்சிகள் நிறைவாக வந்துள்ளன. போபோ ஷஷி இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை ஓகே.

 

bfdndfn

 

ஹாரர் காமெடி டிரெண்ட்டில் இருந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டிய படத்தை இக்காலகட்டத்தில் கொடுத்துள்ளது படத்திற்கு பின்னடைவை தந்துள்ளது. இந்த சீசனுக்கு தகுந்தவாறு சில மாற்றங்கள் செய்து இருந்தால் தப்பிப் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

 

ஹாஸ்டல் - சொதப்பல்!
 

 

சார்ந்த செய்திகள்