நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடுத்ததாக, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது அஜித்தின் 64 வது படமாகும்.

Advertisment

இதற்கிடையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவா, அதற்கடுத்த படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்துப் பேசிய சிவா, “கதை தயாராக உள்ளது. அஜித் தயாராக இருந்தால், படப்பிடிப்பை உடனே தொடங்கிவிடலாம். படத்தின் கதையைப் பற்றி இப்போதைக்கு வெளியே சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார். இதனால்,  அஜித்தின் 65 வது படத்தைச் சிவா தான் இயக்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

Advertisment

இந்த நிலையில், அஜித்தின் 66 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் 2011ஆம் ஆண்டு வெளியாகும் பெரும் வெற்றி பெற்றது. மேலும் சமீபத்தில் மறு வெளியீடு செய்யபட்டு, ரசிகர்களை குஷிபடுத்தியது. அப்போது மங்காத்தா 2 குறித்தும் வெங்கட் பிரபு பேசியிருந்தார். அதாவது அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா 2 எடுத்துவிடலாம் என்றார். மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க பணிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.