Advertisment

“பாலிவுட்டில் இழிவாக நடத்தப்பட்டேன்” - ரெஜினா கசாண்ட்ரா

20 (61)

2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ரெஜினா கசாண்ட்ரா. தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்பு தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகமாக நடித்து பிரபலமானார். இதனிடையே 2019 ஆம் ஆண்டு இந்தியிலும் ‘ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா’ படம் மூலம் கால் பதித்தார். அப்படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியில் வெளியான தலைவி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜாத், கேசரி சாப்டர் 2 ஆகிய இந்தி படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் இந்தியில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர் என்பதால் பாகுபாடு காட்டுவதாக ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். பிரபல ஊடகத்தில் பேட்டி அளித்துள்ள அவர், “இந்தி எனக்கு நன்றாக தெரியும். எனது இந்தி படங்களுக்கு எப்போதும் நானே சொந்தக் குரலில் டப்பிங் செய்வேன். ஆனால் அங்கு தென்னிந்திய நடிகை என்பதால் பாரபட்சம் காட்டுகிறார்கள். நிறைய பேர் என்னை வார்த்தைகளால் மட்டுமல்ல செயல்களாலும் இழிவாக நடத்தினார்கள். இது ஒரு மோசமான அணுகுமுறை. 

Advertisment

இந்தி எனக்கு நன்றாக எழுத பேச தெரிந்தாலும் நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை வைத்து அவர்கள் ஒரு முன்முடிவுக்கு வருகிறார்கள். சினிமா துறையில் ஒரு பெண்ணாக இருப்பதால் ஸ்டீரியோடைப் செய்வது மிகவும் எளிதாக மாறிவிட்டது. இறுதியில் இது காட்சி ஊடகம் என்பதால் அது வெளிப்படையாக தெரிகிறது. இவையெல்லாம் முதல் முதலில் நான் பாலிவுட்டுக்கு சென்ற போது நடந்த விஷயங்கள். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை அங்கு எனக்கு சில அற்புதமான வாய்ப்புகளும் வந்திருக்கிறது” என்றார். 

Regina Cassendra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe