தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரவிமோகன். இவர் திரைக்கு வந்த முதல் படம் முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்த போதிலும் எந்த விதமான விமர்சனத்திற்கும் ஆளாகாமல் இருந்து வந்தவர். அந்த வகையில் இவர் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர். இருப்பினும் "யார் கண்ணு பட்டதோ?" என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப, இவரது குடும்பப் பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது ரவிமோகன் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில், "பராசக்தி" திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10 ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ரவிமோகன், தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின், முதல் படமான "புரோ கோட்" படத்தில் தானே நடித்து வருகிறார். இந்த படத்தை "கார்த்திக் யோகி" இயக்குகிறார். இரண்டாவது படத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளநிலையில், அந்த படத்தை ரவிமோகன் இயக்குகிறார்.
இவ்வாறாக தொடர்ந்து பிசியாக இருக்கும் ரவிமோகன், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பகிந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், தான் பாடகி கெனிஷாவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த விவாகரத்து பிரச்சனைக்கு கெனிஷா தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேனிஷாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ரவிமோகன் வெளியிட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us