ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படங்களை தவிர்த்து ‘தனி ஒருவன் 2’ படத்தை வைத்துள்ளார்.
இதனிடையே ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘ப்ரோ கோட்’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மேலும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற தலைப்பில் யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ படம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரத்ன குமார், பாக்கியம் சங்கர் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இதில் நாயகியாக தாவூதி ஜிவால் நடிக்கிறார். இவரை தவிர்த்து சக்தி வாசுதேவன், கே எஸ் ரவிக்குமார், நாசர், டிடிவி கணேஷ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அப்டேட் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளது. அதாவது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. நாயகன் ரவி மோகன் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ‘நீ தொழிலுக்காக அரசியல் பன்றவன். நான் அரசியலையே தொழிலா பன்றவன்...’ என ரவி மோகன் டப்பிங் பேசும் வசனங்கள் இடம்பெறுள்ளது.
Follow Us