சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரவி மோகன் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு தங்கம். நான் ஹீரோவாகும் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் இது சிவகார்த்திகேயனின் 25வது படம். அதனால் நான் சந்தோஷமாக பேசுவேன். படத்தைப் பற்றி நான் சொல்லியே ஆகணும். இது சாதரணமாக பண்ணக்கூடிய படம் இல்லை. பல பேரின் கடின உழைப்பால் உருவாகியிருக்கு. இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக இந்தப் படம் வரும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எவ்வளவு உழைத்திருக்கார் என எல்லாரும் பார்த்திருப்போம். ஒன்னுமே இல்லாமல் இந்தளவு வந்திருக்கிறார். அதனால் எல்லாவற்றிற்கும் அவர் தகுதியானவர். இன்னும் அவர் மேலே வளர வேண்டும். 

Advertisment

சுதா மேம் பத்தி சொல்லும் போது, எப்படி ஒரு இடத்தில் நல்ல ஆண்கள் இருக்கும் போது பெண்கள் பாதுகாப்பாக உணர்வாங்களோ அதே மாதிரி தான் சுதா மேமால் படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். படத்தில் ஒரு தீயை அணைக்க நான் ட்ரை பன்னுவேன். அதே போல் வெளியிலும் நிறைய பேர் தீயை அணைக்க ட்ரை பன்றாங்க. ஆனால் இந்த தீ ஆபத்தான தீ இல்லை. கடவுள் முன்னாடி ஏத்தக்கூடிய ஒரு அழகான தீ. அதை அழகா ஏத்தி கொண்டு வந்த எங்க டீம் எல்லாருக்கும் என்னுடைய நன்றி.   

இந்த படத்தில் நான் வில்லனாக நடிக்க இரண்டு காரணம். ஒன்னு சுதா கொங்கராவுடைய ஸ்கிரிப்ட். இன்னொன்னு அவங்கதான். ஏன்னா ஒரு நல்ல டைரக்டரோடு ஒர்க் பன்னனும்னு நினைச்சேன். அந்த வாய்ப்பு இதில் வந்ததால் உடனே ஓகே சொல்லிட்டேன். இன்னைக்கு நான் எடுத்த முடிவால் எந்த கவலையும் படவில்லை. மறு யோசனையும் கிடையாது. ஏன்னா, என்னுடைய மானசீக குரு மணிரத்னமே, ரவி இந்த மாதிரி பன்னனும், அவனை பார்த்து நிறைய பேர் இந்த மாதிரி மல்டி ஸ்டாரர்ல பன்னனும்னு பாராட்டினார். அதைவிட வேற பாராட்டு எங்கேயும் எனக்கு இல்லை. 

Advertisment

இதையெல்லாம் தாண்டி இந்த படம் நடிக்க இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. இந்தப் படம் சுய மரியாதையை காப்பாற்ற போராடும் ஒரு படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் சுய மரியாதையை காப்பாற்றிக்க போராடினேன். அதைத்தான் உங்களுக்கும் சொல்கிறேன், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் எந்த ஒரு இடத்திலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதீங்க. இது மட்டும் உங்க மனசுல இருந்திச்சுன்னா கண்டிப்பா, நீங்க ஒரு நல்ல மனிதரா இந்த உலகத்தில் வாழ முடியும். அந்த நம்பிக்கையை இந்த படம் ஏற்படுத்தி கொடுத்துச்சு” என்றார்.