பராசக்தி படத்தை தொடர்ந்து கராத்தே பாபு மற்றும் ப்ரோ கோட் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் ரவி மோகன். இதனிடையே ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதில் அவர் கைவசம் வைத்திருக்கும் ப்ரோ கோட் படமும் இருக்கிறது. இதுமட்டுமல்லாது ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டார்.
யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்குகிறார். படத்தின் அறிவிப்பு ப்ரோமோ கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜை விழாவில் ரவிமோகன், யோகிபாபு மற்றும் கெனிஷா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதுநாள் வரை, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ரவி மோகன், இயக்குநராகவும் ஒரு இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் பொழிந்து வருகிறது.
The journey begins with divine blessings ! aOM ✨
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) March 5, 2026
Shoot starts today with Pooja for @iam_RaviMohan’s Debut directorial #AnOrdinaryMan Starring @iYogiBabu !#aOM@keneeshaa@RaviMohanStudio@ProRekhapic.twitter.com/yC1xXq71vY
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/385-2026-03-06-17-44-56.jpg)