ரவி மோகன் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘ப்ரோ கோட்’(BRO CODE). கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஹர்ஷவர்தன் ரமேஷ் குமார் மேற்கொள்கிறார். 

Advertisment

இப்படத்தின் தலைப்பிற்கு டெல்லியை சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தது. ப்ரோ கோட் என்ற பெயரை தங்கள் நிறுவனம் பதிப்புரிமை செய்து வைத்திருப்பதால் அதை படத்தில் பயன்படுத்தக்கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தது. இதையடுத்து ப்ரோ கோட் என்ற பெயரை தனது படத்துக்கு பயன்படுத்த தடுக்கக்கூடாது என அந்த மதுபான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என ரவி மோகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

Advertisment

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்தத் தடுக்கக்கூடாது என அந்த மதுபான நிறுவனத்துக்கு மூன்று மாதம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மதுபான நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரவி மோகன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நீதிபதி தேஜாஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தில் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவது வர்த்தக முத்திரையில் மீறலாகும், மேலும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்கும் என்று வாதிட்டார். 

இதையடுத்து ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுபான நிறுவனத்தின் விண்ணப்பம் வர்த்தக முத்திரை பதிவேட்டில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை, நிலுவையில் தான் இருக்கிறது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப்ரோ கோட் என்ற தலைப்பை பயன்படுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு நான்கு வாரங்களுக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

Advertisment