விஸ்வக் சென் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கல்ட். இப்படத்தை தாரக் சினிமாஸ் தயாரிக்க கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் விரைவில் வெளியாகிறது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கு விஷ்வெக் சென் ரோலெக்ஸ் வாட்ச் பரிசாக அளித்தார்.
இந்த பரிசு குறித்து பேசிய ரவி பஸ்ரூர், “எனக்கு இசையில் 25 வருட அனுபவம் உள்ளது. நல்லவர்களுக்கு நல்ல இசையை வழங்க நான் எப்போதும் முயற்சிப்பேன். இன்று, இந்த பரிசின் மூலம் அவர் என் ஆன்மாவை கௌரவித்துள்ளார். இசை மீதான எனது அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். இது வெறும் வாட்ச் அல்ல, இது இசைக்கலைஞர்களுக்கான பாராட்டு” என்றார்.
மேலும் சிறுவயதில் இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “என்னுடைய 18வது வயதில், நான் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் இரண்டு முறையும் காப்பாற்றப்பட்டேன். இரண்டாவது முறையாக என்னைக் காப்பாற்றியவர் எனது இசையைக் கேட்டு, எனக்கு ஒரு கீபோர்டு வாங்கி, ரூ35,000 கொடுத்தார். அன்று, நான் என் பெயரை ரவி என்று மாற்றினேன். அது என் உயிரைக் காப்பாற்றியவரின் பெயர்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/09-37-2026-02-23-20-03-59.jpg)