Advertisment

தொடர் தொல்லை... - ரவீனா ரவி பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

14 (55)

டப்பிங் கலைஞராகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ரவீனா ரவி. இவர் கடைசியாக டப்பிங்கில் பைசன் படத்திற்கு ரஜிஷா விஜயனுக்கு குரல் கொடுத்திருந்தார். நடிகையில் ‘வாலா’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘வட்டார வழக்கு’ படத்தில் நடித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு மர்ம நபரிடம் இருந்து தொடர்ந்து தொல்லை வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பொதுமக்கள் கவனத்திற்கு... இதை அலட்சியப்படுத்த வேண்டாம். மூன்று ஆண்டுகளாக எங்களை துன்புறுத்தி வரும் ஒரு ஃபாலோயரிடமிருந்து என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னை பாதுகாப்பதற்காக இதை நான் பதிவிடுகிறேன். காவல்துறையில் அளித்த புகார்களும் அவர்கள் விடுத்த எச்சரிக்கைகளும் இதை நிறுத்தி விடும் என்ற நம்பிக்கையில் இதுவரை நான் அமைதியாக இருந்தேன். 

Advertisment

சபரீஷ் என்ற நபரும் அவரது இரட்டை சகோதரரும் என்னையும் என் குடும்பத்தினரையும் என் நண்பர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் மெசேஜ்களிலும் கமெண்ட்களிலும் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை மட்டுமில்லாமல் எனக்கு நெருக்கமானவர்களையும் குறி வைக்கின்றனர். என்னால் இந்த தொல்லையை எதிர்கொண்ட என்னுடைய நண்பர்களிடத்திலும் குடும்பத்தினரிடத்திலும் என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் சட்டபூர்வமான அணுகுமுறையை மேற்கொண்டும் அவர்கள் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல கணக்குகளின் மூலம் துன்புறுத்துகின்றனர். 

என்னை மட்டும் அல்லாது பல்வேறு நடிகைகளையும் கலைஞர்களையும் இதுபோல் துன்புறுத்துகிறார்கள். இதை இப்போது பகிரங்கமாக பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது.... முதல் விஷயம் அந்த நபரின் கணக்கை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுங்கள். இரண்டாவது, அந்த நபரிடமிருந்தோ அல்லது அவரது சகோதரரிடமிருந்தோ ஏதேனும் மெசேஜ்கள் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். மூன்றாவது, அவர்களின் கமெண்டுகளுக்கும் மெசேஜ்களுக்கும் ரிப்ளை செய்யாமல் இருங்கள். 

இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை அடிக்கடி அழைக்கப்படுகிறது. இதனை நிரூபிக்க இது போன்ற விஷமிகளுக்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுள்ளார். 

instagram Raveena Ravi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe