இயக்குநர் ரத்னகுமார் ‘29’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக பிரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், “எனக்கு முதல் முறை தற்கொலை செய்யும் எண்ணம் என்னுடைய 29 வயதில் வந்தது. அதற்கு முன்னாடி சினிமாவில் டைரக்டராக வேண்டுமென ஹெச் சி எல் வேலையை விட்டு வந்தேன். என்னை இயக்குநராக பார்க்க 12 வருடம் ஆனது.
எனக்கு 29 வயது இருக்கும் போதுதான் வீட்டிலும் கல்யாணம் செய்ய சொல்லி அழுத்தம் இருந்தது. முப்பது வயதை தொட்டுவிட்டால் ஜாதகத்தில் நிராகரித்து விடுவார்கள், வேலையிலும் நிராகரித்து விடுவார்கள், படங்களிலும் நிராகரித்துவிடுவார்கள். ஆனால் என்னுடைய 29 வது வயதில் நான் மது என்னும் தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். பின்பு வேறொரு கதை எழுதி, 45 தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டுவார்கள். ஆனால் முதல் படம் ஏன் இதை செய்ய வேண்டும்... நீங்கள் இயக்கிய மது குறும்படத்தையே பண்ணலாமே என சொன்னார்கள். 46வது நபராக கார்த்திக் சுப்புராஜும் சொன்னார். அவர்தான் என்னுடைய மது குறும்படத்தை இன்னும் ஆறு குறும்படத்தோடு தியேட்டரில் ஸ்கிரீன் செய்தார்.
அந்த நிகழ்வின்போது ஒரு ரிப்போர்ட்டர் இதில் யார் மது குறும்படத்தை எடுத்தார் எனக் கேட்டு இவன் டைரக்டர் ஆகி விடுவான் என்றார். அதன் பிறகு டைரக்டராக உருவாகி விட்டேன். பின்பு நிறைய பேர் என்னை பார்ப்பார்கள் கைகுலுக்கி நீங்கள் விஜய் அண்ணா ரசிகரா... நானும் அவர் ரசிகர் தான்... அவர் எப்படி இருக்கிறார் என விசாரித்து விட்டு போயிடுவார்கள். பின்பு இன்னொரு கட்டத்தில் அதே போல் சிலர் பார்த்துவிட்டு நீங்கள் லோகேஷ் கனகராஜ் நண்பரா... அவர் எப்படி இருக்கிறார் என விசாரித்துவிட்டு போயிடுவார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டேன். இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டாக் கூட யோவ் மதன் கௌரி நீ எங்கய்யா இங்கன்னு கமெண்ட் செய்து விடுவார்கள். அப்போ எனக்காக யார் வந்து என்னை பார்ப்பார்கள். அந்த கேள்வியில் யோசனையில் தான் இப்படம் எடுத்தேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/13-18-2025-12-10-19-04-29.jpg)