இயக்குநர் ரத்னகுமார் ‘29*’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. 29வது வயதில் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் சவாலை காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் சொல்லியிருப்பது போல் டைட்டில் டீசர் அமைந்திருந்தது. மேலும் பட டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ரத்னகுமார், தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. மேலும் ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. விரைவில் படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us