சமூக ஊடகங்கள் தற்காலத்தில் மக்களிடம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. இதனால் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் மக்களைச் சென்று சேர்ந்து விடுகின்றன. இருப்பினும், பல நேரங்களில் தவறான கருத்துகளும் மக்களிடம் பரவி, அது பலரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் திரை நடிகர்களாகத் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பெரிய அளவில் ட்ரோல்களை செய்யப்பட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இது குறித்து சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 

Advertisment

அவர் பேசியதாவது, “என்னைப்பற்றி தவறான கருத்துக்கள் வரும்போது, எனது நண்பர்கள் நீ ஏன் இது குறித்து எதுவும் பதில் சொல்லவில்லை? அதற்கு நீ மறுப்பு தெரிவிக்கலாமே என்று கூறுகிறார்கள். நான் ஏன் அவர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்? அவர்கள் பணத்திற்காக இவ்வாறான வேலையில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. அவ்வாறு, அவர்களுக்கு நான் பதிலளித்தால், அது அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். அதை நான் விரும்பவில்லை. 

Advertisment

பொய்களைப் பரப்புவோர்கள் அதைச் செய்துகொண்டே தான் இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை. நான் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவிற்கு வந்தேன், அதனால் எனது வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் அன்று சினிமாவிற்கு வரும்போது எப்படி இருந்தேனோ அப்படித் தான் இன்று வரை இருக்கிறேன். மக்கள் தங்களுக்குப் பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள், எது உண்மை என்பது அவர்களுக்குப் புரியும் . அதனால், ட்ரோல் செய்பவர்களைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அதை நான் கண்டுகொள்வதுமில்லை” என்று கூறியிருந்தார்.