ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா லீட் ரோலில் நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கேர்ள் ஃபிரின்ட்’. இதில் தீக்ஷித் ஷெட்டி, அணு இமானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீரஜ் மொகிலினேனி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் பாடல்களுக்கும் பிரசாந்த் விகாரி பின்னணி இசைக்கும் இசை அமைத்துள்ளனர். இப்படம் கடந்த 7ஆம் தேதி தெலுங்கை தாண்டி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை ரூ.21 கோடி வசூலித்துள்ளது.
 
இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுஇனருடன் விஜய் தேவரகொண்டாவும் கலந்து கொண்டார். அதில் ராஷ்மிகா கையில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “நான் ராஷ்மிகாவை கீதா கோவிந்தம் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இப்போது அவர் கரியரின் உச்சத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு படத்தில் நடித்தற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் நிறைய விமர்சனங்களையும் இழிவுகளையும் எதிர்கொண்டு வருகிறார். 

Advertisment

அவர் இடத்தில் நானாக இருந்தால் உடனடியாக எதிர்வினை ஆற்றுவேன். ஆனால் அவர் கருணையுடன் எல்லாவற்றையும் அணுகிறார். ஆனால் ஒரு நாள் அவர் யார் என்பதை உலகம் அறியும். அவர் ஒரு அற்புதமானவர்” என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த ராஷ்மிகா எமோஷனாகி கண்கலங்கினார். இதையடுத்து ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து இருக்கிறார். தொடர்ந்து வெற்றிவிழாவிலும் கலந்து கொண்டுள்ளார். அவரை போன்று ஒருவர் எல்லார் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் கிடைப்பது ஒரு ஆசீர்வாதம்” என்றார். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். சமீபத்தில் நிச்சயமும் செய்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisment