சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சிக்கந்தர்’. சஜித் நதியாத்வாலா தயாரித்திருந்த இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களுக்கு பிரிதம் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கப் பின்னணி இசைக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. இதற்கு காரணம், சல்மான் கானின் லேட் வருகை தான் என ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸை சல்மான் கான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். பின்பு சல்மான் கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு விளக்கமளித்து கிண்டல் செய்திருந்தார். அதாவது, அவருடைய லேட் வருகைக்கு அவரது விலா எலும்பு முறிவு தான காரணம் எனவும் முருகதாஸ் இயக்கிய மதராஸி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படம் சரியாக போகதது குறித்து பட நாயகி ராஷ்மிகா தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “சிக்கந்​தர் கதை முதலில் முருக​தாஸ் சொன்ன போது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் அதற்கு மாறாக இருந்தது. பொது​வாக சில படங்களில் அப்​படித்​தான் நடக்​கும். ஒரு கதையைக் கேட்கும்​போது, அது ஒன்​றாக இருக்​கும். திரைப்​பட​மாக உரு​வாகும் போது மாறும். அது சினிமா​வில் சகஜம்​தான். சிக்​கந்​தர் படத்​தி​லும் அது நடந்தது” என்​றுதுள்​ளார்​.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/01-2-2026-01-20-18-34-06.jpg)