ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் முழுவதும் தீப்பிடித்து சில பயணிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

பஸ்ஸில் மொத்தம் 43 மூன்று பயணித்ததாகவும் அதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலர் தப்பித்து உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்தார். இதையடுத்து தெலங்கானா மாநிலம் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த சோக சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்திருந்ததாவது, “கர்னூலில் இருந்து வந்த செய்தி என் மனதை மிகவும் பாதித்தது. எரியும் அந்த பேருந்தில் பயணிகள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. 

சிறு குழந்தைகள் உட்பட ஒரு மொத்த குடும்பமும், இன்னும் பலர் சில நிமிடங்களிலேயே தங்கள் உயிரை இழந்ததை நினைத்து பார்க்கும் போது உண்மையிலேயே பேரழிவை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment