Advertisment

ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்!

19 (66)

பாலிவுட்டில் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. முன்னதாக சல்மான் கானுக்கு பிரபல கேங்ஸ்டர் கும்பல் லாரன்ஸ் பிஷ்னாய் குழு, தொடர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதாவது அவர்கள் தெய்வீகமாக வழிபடும் மானை சல்மான்கான் வேட்டையாடியதால் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் அவர் வீட்டில் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இயக்குநர் ரோகித் ஷெட்டி இல்லத்திலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுவும் இந்த கும்பலால் தான் நடத்தப்பட்டது என பின்பு தெரிய வந்தது. ரோகித் ஷெட்டி அக்கும்பலின் வேலைகளில் தலையிடுவதால் அதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் இந்த சம்பவம் அரங்கேறியது. 

Advertisment

இந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபலத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் ரன்வர் சிங். அவரது வாட்ஸ் அப்பிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் பல கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரன்வீர் சிங் மும்பை காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ரன்வீர் சிங் இல்லத்திற்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரோகித் ஷெட்டி துப்பாக்கி சூடு பிறகு நடந்துள்ளதால், இதுவும் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் யூகிக்கின்றனர். இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment
police ranveer singh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe