கோவாவில் கடந்த 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் திரை பிரபலங்கள் ரஜினி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Advertisment

இந்நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், அரங்கில் அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “காந்தாரப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷெப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தார். இது தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Advertisment

அவர் பெண் ஆவி என்று பேசியதும் அக்கதாப்பாத்திரம் போல் நடித்ததும் ஒரு சாராரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அது பெண் ஆவி இல்லை பெண் கடவும் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.