மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் நாளை வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மற்றும் ரஞ்சித் படத்தின் சிறப்பு காட்சியை பங்கேற்றுள்ளார். படம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு இயக்குநரின் படைப்பை எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மனம் கோணாமல் கருத்து சொல்ல வேண்டும். இந்தப் படம் ஒரு மதத்தை பிரிப்பதற்கான படம் இல்லை. ஆனால் படத்தை பற்றி நிறைய விமர்சனங்களை பார்க்கிறேன்.
பிஆர் டீம் வைத்து படத்தை ஓடவைக்கக்கூடாது என செய்கிறார்கள். தரமற்ற படம் என பரப்புகிறார்கள். அப்படி செய்யக்கூடாது. இது அற்புதமான படம். மனம் உள்ள எந்த மனிதன் பார்த்தாலும் அவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். நாட்டை கொள்ளை அடிக்க வந்தவங்க மாறாக மதத்தை பரப்புனாங்க. இதுல பல உயிர் போயிருக்கு, இது வரலாறு” என்றார்.
Follow Us