சிவகார்த்திகேயன், ‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இதன் முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வந்தது. அமெரிக்காவில் டீ-ஏஜிங் பணிகள் மற்றும் நடிகர்களின் தேர்வு ஆகியவை தொடர்ந்து நடந்து வந்தது. சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் படம் உருவாகிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. 

Advertisment

ஆனால் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு முன்னால் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதன் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது ஒரு புறம் இருக்க வெங்கட் பிரபு பட பணிகளும் நடந்து வருகிறது. 

Advertisment

09 (36)

இப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரயதர்ஷன் கமிட்டாகியுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் கயாடு லோஹரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதகாவும் கூறப்பட்டது. இந்த நிலையில் புதிதாக ரம்யா நம்பீசன் இப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. அது தற்போது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. அத்தகவல் தொடர்பான புகைப்படம் ஒன்றை ரம்யா நம்பீசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து என்னுடைய அடுத்த படம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது கல்யாணி பிரயதர்ஷன் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அடுத்த அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.