குக்கூ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன். அதற்கடுத்து ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி போன்ற படங்கள் மூலமாகத் தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது படங்கள் அனைத்தும் எளிய மக்களின் வாழ்வியலைக் கண் முன் நிறுத்துவதாக அமைகிறது. அந்த வகையில் தற்போது இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் தான் மை லார்ட்.
இந்த படம் கடந்த 13 தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விதமான விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இதில், சசிகுமார் மற்றும் சைத்ரா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சோமசுந்தரம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், இயக்குநர் ராம் படம் குறித்து தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவர், “அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவனுக்கும், அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் இருப்பவனுக்கும் இடையே நடைபெறும் கதை இது. ஒரு சமூகத்தின் இரு முனைகளையும் சொல்லும் தைரியமான படைப்பு இது. கதையின் ஆழமும் திரைக்கதையின் வலிமையும் பாராட்டுதலுக்குரியது. ராஜூமுருகனின் துணிச்சலான படைப்பு இது” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சசிகுமார் குறித்து, “அயோத்தி படத்திற்குப் பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில் பெரிய அளவில் மாறும் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அவரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினராகச் சேர்த்துள்ளது” என்றும் கூறியுள்ளார். இவ்வாறாக இப்படம் பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/19-73-2026-02-20-12-57-48.jpg)