Advertisment

“எழுத்திலும் படப்பிடிப்பிலும் போடும் உழைப்பை...” - சினிமா மாற்றம் குறித்து ராஜூ முருகன்

19 (72)

ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியான படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியிருந்த இப்படம் கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 

Advertisment

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய ராஜூ முருகன், “இந்த படத்தை சரியாக புரிந்து கொண்டதற்கும் படம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டதற்கும் அனைவருக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படம் உருவாக முதல் காரணமான அம்பேத்குமாருக்கு எனது நன்றி.

Advertisment

இந்தப் படத்தை கேட்ட நொடியில் இருந்து இப்போது வரைக்கும் தன் தோளில் தூக்கி சுமந்து நம்பிக்கையோடு இருந்து கொண்டிருக்கிற சசிக்குமாருக்கு நன்றி. நான் சினிமாவுக்கு வந்த புதிதிலிருந்து இப்போது நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது. ஒரு கதையை எழுத தொடங்குவதிலிருந்து ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. படப்பிடிப்பு போகும்போது இயக்குநர் வேலை ஆரம்பிக்கிறது. போஸ் ப்ரொடக்‌ஷன் வேலைகளிலும் அதேதான். ஆனால் இப்போது ரிலீஸ் வரைக்கும் ஏகப்பட்ட விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. 

எழுத்தின் போதிலும் படப்பிடிப்பின் போதிலும் எவ்வளவு உழைப்பை போடுகிறோமோ அதை புரமோஷனுக்கும் போட வேண்டும் என்று மாறியிருக்கிறது. நான் ஆரம்பத்தில் புரமோஷனுக்கு போக மாட்டேன், அடிப்படையாக நான் பத்திரிக்கையாளனாக இருந்ததால் அந்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இப்போது அது ஒரு பெரிய டாஸ்க்காக இருக்கிறது. அது நல்லது கெட்டது என்பதை தாண்டி இந்த உலகம் மாறி கொண்டே இருப்பதை நானும் கருத்தில் எடுத்துக்க வேண்டியுள்ளது” என்றார். 

raju murugan Sasikumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe