ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘எச காத்தா’ மற்றும் ‘ராசாத்தி ராசா’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்க்கையில் கிட்னி திருடுவதை மையமாக வைத்து அதன் பின்னால் இருக்கும் அரசியலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது போல் அமைந்துள்ளது. இந்த பிரச்சனையில் சிக்கி, நீதி வேண்டி நீதிமன்றம் செல்லும் சசிகுமார் மற்றும் அவரது மனைவி சைத்ரா இறுதியில் வென்றார்களா என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
மேலும் ட்ரெய்லரில் வழக்கம் போல் ராஜூ முருகன் படத்தில் இடம்பெறும் அரசியல் நையாண்டி வசனங்கள் இதிலும் இடம் பெறுகிறது. குறிப்பாக படத்தின் தலைப்பை குறிக்கும் வகையில், “ஒரு தீர்ப்பெழுதுற அதிகாரத்தை அந்த பரபிரம்மா ஒரு கடைக்கோடி மனுஷன் கிட்ட கொடுத்துருக்கு” என நீதிபதி பேசும் வசனம் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/14-44-2026-01-19-19-11-18.jpg)