Advertisment

52 சீடி... பாலா படம் ஏற்படுத்திய தாக்கம்... - ராஜூ முருகன் பகிர்ந்த பிளாஷ்பேக்

12 (32)

ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் இதுவரை ‘எச காத்தா’ மற்றும் ‘ராசாத்தி ராசா’ ஆகிய பாடல்கள் வெளியாகின. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருப்பது தெரிய வந்தது. 

Advertisment

இப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜூ முருகன் கலந்து கொண்டு பேசுகையில், “நான் உதவி இயக்குநராக இருந்தபோது மதுப்பழக்கம் இருந்தது. அப்போது என்னுடைய வாடிக்கை, வேலை முடித்துவிட்டு இரண்டு மது பாட்டில் வாங்கி ஒன்றை குடித்துவிட்டு இன்னொன்றை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சீடி கடைக்கு போய் பிதாமகன் படத்தை வாங்கி நைட்டு வீட்டில் பார்ப்பது. இதே மாதிரி தொடர்ந்து செய்து கொண்டு வந்தேன். ஒரு நாள், நான் வீட்டை காலி பண்ணும் போது 52 பிதாமகன் சீடி இருந்தது. அந்தப் படம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisment

மேலும் எளிய மனிதர்களை சினிமாவாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.  இதை சொல்வதற்காக பாலா ஆபீசுக்கு போனேன். அவரிடம் சொன்னால் அவர் மிகவும் பாராட்டுவாரென என எதிர்பார்த்தேன். ஆனால் சொன்ன பிறகு ஒரே வார்த்தையில் அப்படியா என முடித்துக் கொண்டார். அதன் பிறகு அது குறித்து பேசவே இல்லை. தன்னுடைய படத்தின் பிரம்மாண்டத்தை துளிக்கூட அறியாதவராக அவர் இருப்பதை மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். என்னைப் போன்ற நிறைய பேருக்கு ஆத்மார்த்தமாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய பாலா சாருக்கு நன்றி” என்றார். 

bala raju murugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe