Advertisment

எச்.ராஜாவை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

13 (36)

பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கடந்த 30ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு திடிரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisment

அங்கு அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து முதல்வர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

Advertisment

இந்த நிலையில் ரஜினிகாந்த் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். ரஜினியை கண்டதும் எச்.ராஜா, சற்று எழுந்து உட்கார்ந்தார். அவரிடம் கைப்பிடித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்து குணமடைய வாழ்த்தினார்.    

Actor Rajinikanth h.raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe