இந்திய சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் நேற்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
இப்போது அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் பேரன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் துலாபாரத்தில் தனது எடைக்கு இணையாக நாணயங்களை வழங்கினார். மேலும் அவரது குடும்பத்தார்களும் அவர்களது எடைக்கு இணையான நாணயங்களை வழங்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/17-28-2025-12-13-15-43-38.jpg)