டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக படக்குழு புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/04/14-54-2026-02-04-16-02-40.jpg)
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சி சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், அனிருத், நெல்சன், கேஎஸ் ரவிகுமார், சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஷோ முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் படம் எப்படி இருந்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ரொம்ப நல்லாருக்கு” எனக் கூறினார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us