சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பரப்பாக பேசப்பட்டு வரும் படம் பராசக்தி ஆகும். இது வரலாற்று நிகழ்வு குறித்த படம் என்பதாலும், தாய் மொழி உணர்வு  குறித்த படம் என்பதாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பலரும்  பாராட்டி வருகின்றனர். இதன் விளைவாக இன்று சென்னையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் , நடிகர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்தும், படத்தின் முக்கியத்தும் குறித்தும் பேசியிருந்தனர். மேலும், இந்த படத்தில் நடித்ததை பெருமைக்குரிய விஷயமாக கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.   

Advertisment

இவ்வாறாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இப்படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா போன்றோர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100 வது படமாகும். இப்படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிவகார்த்திகேயன், இப்படத்தில் நடித்தது எனது வாழ்நாள்பெருமை என்று  கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தினை பார்த்துவிட்டு பலத் திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் சிவர்த்திகேயன் கூறுகையில், ‘பராசக்தி’ படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்த ரஜினி வாழ்த்து தெரிவித்தார். எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இது மிகவும் துணிச்சலான படம் என்றும், இரண்டாம் பாதி சூப்பர் என்று பாராட்டினார். மேலும், கமல்ஹாசன் சார் அமரன் படத்திற்காக என்னை 2 நிமிடங்கள் பாராட்டி பேசினார், ஆனால் ‘பராசக்தி’ படத்தில் என் நடிப்பை பாராட்டி 5 நிமிடங்கள் பேசினார்" எனத் தெரிவித்தார்.