Advertisment

“அருமையான மனிதர்...  அவரது திடீர் மறைவு வேதனையளிக்கிறது” - ரஜினிகாந்த் இரங்கல்

20 (59)

முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்துள்ளார். தயாரிப்பாளராக ரஜினி நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம் மற்றும் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். 

Advertisment

இயக்குநராக சத்யராஜ் நடித்த ‘மந்திரப்புன்னகை’ மற்றும் ஆனந்த் நடித்த ‘நிலா பெண்ணே’ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த சூழலில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14ஆம் தேதி காலமானார். இவரது மறைவு அவரது குடும்ப வட்டாரத்திலும் கோலிவுட் வட்டாரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Advertisment

19 (69)

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கம் மூலம் தமிழ் அழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கலில், “அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். 
அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

film producer condolence Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe