ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கவுள்ளார். ரஜினியின் 173வது படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 2027 பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 

Advertisment

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி டான் படத்தை தொடர்ந்து ரஜினிக்கு கதை கூறி காத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்பு அது கைக்கூடவில்லை. இந்த நிகழ்வு ரஜினியின் லால் சலாம் படத்திற்கு முன்பு நடந்தது. இந்த சூழலில் மீண்டும் சிபி சக்ரவர்த்தி ரஜினிக்கு கதை கூறி ஓகே வாங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை படத்தின் மீது உருவாக்கியுள்ளது.