திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் இத்துறைக்கு முன்பாக சென்னை திரைப்பட பயிற்சி கல்லூரியில் பயின்று வந்தார். அப்போது அங்கு ஆசிரியராக பணிபுரிந்த நாராயணசாமி என்பவர் ரஜினிக்கு நடிப்பு பயிற்சி கற்றுக் கொடுத்தார். பின்பு அவரே ரஜினியை பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு நாராயணசாமி பத்திரிக்கையாளராகவும் திரைப்பட விமர்சகராகவும் இருந்து வந்தார். 

Advertisment

12 (12)

இந்த நிலையில் நாராயணசாமி(92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த ரஜினிகாந்த் தந்து ஆசிரியரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

Advertisment