ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலையில் ரிலீஸஸாக உள்ளது. இப்படத்தை அடுத்து மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமலுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்திற்கு முன்பு தற்போது ரஜினி ஒரு புதுப் படத்தில் நடிக்கவுள்ளார்.
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க சுந்தர் சி இயக்க உள்ளார். ரஜினியின் 173 ஆவது படமாக இப்படம் உருவாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் “அன்புடைய ரஜினி காற்றாய் அலைந்த நம்மை இறுக்கி இறுக்கி தனதாக்கியது, இரு பணிப்பாறைகள் உருகி வழிந்து இரு சிறு நதிகள் ஆனோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடைய நெஞ்சார நம்மை காத்த செம்புலம் நனைக்க நாளும் பொழிவோம் மகிழ்வோம் வாழ்க நாம் பிறந்த கலைமண்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, இப்போதே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதாவது 2027 பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படம் வெளியாகும் எனவும் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது. சுந்தர் சி - ரஜினி காம்போவில் இதற்கு முன்னதாக அருணாச்சலம் படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. அந்த காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதோடு ரஜினி - கமல் இருவரும் தற்போது இணைந்துள்ளதால் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
Follow Us