Advertisment

ரஜினி - கமல் இணையும் படம்; வெளியான அறிவிப்பு!

11 (49)

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். 

Advertisment

இதையடுத்து இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து இருவரும் நடிக்க திட்டமிட்டனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை. 

Advertisment

இதையடுத்து படத்தின் இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் நெல்சன் இறுதி செய்யப்பட்டதாகவும் படத்தின் ப்ரோமோ ஷூட் சென்னையில் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் இன்று காலை தங்களது நிறுவனத்தில் தயாரிக்கும் புதுப் படத்தின் அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிவித்தது. 

அதன் படி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ரஜினியை குறிக்கும் வகையில் RK என்றும் கமலை குறிக்கும் வகையில் KH என்றும் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த அப்டேட் நாளை 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போஸ்டரில் நாளை மறுநாளான 21ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதால் படத்தின் ப்ரோமோ அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Actor Rajinikanth Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe