தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். 

Advertisment

இதையடுத்து இருவரும் 47 வருடங்களுக்கு பிறகு  மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்குகிறார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரஜினியும் கமலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு காஸ்டியூம்களை தேர்வு செய்கின்றனர். பின்பு ரெட்ரோ கெட்டப்பில் இருவரும் ஒரு காரை எடுத்து கிளம்ப பின் சீட்டில் அமர்ந்திருக்கும் நெல்சன் மற்றும் அனிருத்திடம் யார் ஹீரோ என இருவரும் கேட்கின்றனர். அதோடு ப்ரோமோ முடிகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ப்ரோமோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.