Advertisment

ரெட்ரோ ஸ்டைல்; வெளியான ரஜினி - கமல் படத்தின் அடுத்த அப்டேட்!

18 (65)

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். 

Advertisment

இதையடுத்து இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்க திட்டமிட்டனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை. 

Advertisment

இதையடுத்து படத்தின் இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் நெல்சன் இறுதி செய்யப்பட்டதாகவும் படத்தின் ப்ரோமோ ஷூட் சென்னையில் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரஜினி, கமல் இருவரும் இணையும் பட அறிவிப்பை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அடுத்த அப்டேட் இன்று நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவித்தது. 

அதன்படி அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் எனவும் தெரிவித்து ரஜினி மற்றும் கமல் கைகள் மட்டும் இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 46 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் ப்ரோமோவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.  

Actor Rajinikanth Kamal Haasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe