பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தர்மேந்திரா(89). 1960 ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நாயகனாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியைத் தாண்டி பஞ்சாபி மொழி உட்பட கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பத்மபூஷன் விருதும் இந்திய அரசு வழங்கி கௌரவித்தது. சினிமாவை தாண்டி அரசியலிலும் இருந்துள்ளார். பிஜேபி சார்பில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இவர் சமீபகாலமாக உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, இவர் மறைந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை அவரது மனைவியான நடிகை ஹேமா மாலினி தெரிவித்தார். மேலும் செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக சாடினார். பின்பு தர்மேந்தியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/24/17-18-2025-11-24-17-44-41.jpg)
இந்த நிலையில் தர்மேந்திரா இன்று காலமாகியுள்ளார். இவரது மறைவு திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் மோடி முதல் பல்வேறு பிரபலஙக்ள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரியாவிடை நண்பரே. உங்கள் தங்கமான குணத்தையும் நாம் பகிர்ந்து கொண்ட தருணத்தையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” எனக் குறிப்பிட்டு தர்மேந்திரா குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பிட்டுள்ளார். ரஜினி நடித்த சட்டம் ஒரு இருட்டறை இந்தி ரீமேக்கான ‘அந்தா கானூன்’ படத்தில் கேமியோ ரோலில் தர்மேந்திரா நடித்திருந்தார். மேலும் ‘ஃபரிஷ்டே’, ‘இன்சாஃப் கோன் கரேகா’ உள்ளிட்ட படங்களிலும் ரஜினியும் தர்மேந்திராவும் இணைந்து நடித்துள்ளனர்.
Follow Us