பாலிவுட்டில் 1989 ஆம் ஆண்டு ஹர்மேஷ் மல்கோத்ரா இயக்கத்தில் உருவான படம் ‘ஹம் மே செகன்ஷா கோன்’. இப்படத்தில் ரஜினிகாந்த், சத்ருகன் சின்கா, ஹேமா மாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். ராஜா ராய் தயாரித்திருந்த இப்படத்திற்கு லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைத்திருந்தார். 35 எம்எம் ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கப்பட்ட இப்படம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சென்சார் செய்யப்படாமல் இருந்தது.
இதனால் பட வெளியீடு கிடப்பில் போடப்பட்டது. பின்பு படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் வேறொரு தொழிலுக்காக லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். பின்பு அவரது மகன் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். இதனால் பின்னடைவை சந்தித்த அவர் படம் பற்றி எதுவும் முன்னெடுப்பு எடுக்காமல் இருந்தாலர். இதனிடைய படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்கோத்ராவும் இறந்து போனார். இருப்பினும் படத்தின் அசோசியேட் தயாரிப்பாளர்களான அஸ்லாம் மிர்சா மற்றும் சாபனா மிர்சா படத்தை வெளியிட முன்னெடுப்புகள் எடுத்தனர். அதாவது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அனைவரிடமும் தடையில்லா சான்றிதழ் பெற்றனர். பின்பு ஏஐ மூலம் மீள்பதிவு செய்து 4கே தரத்தில் 5.1 ஒலி வடிவில் படத்தை மெருகேற்றினர். இதனால் படம் தற்போது வெள்யீட்டுக்கு தயாராகியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/09-27-2026-01-23-16-44-07.jpg)
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் ராஜா ராய், “படம் மீதான நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. ஏகப்பட்ட துயரங்கள் பின்னடைவுகள் நீண்ட மௌனத்தை இப்படம் எதிர்கொண்டுள்ளது. இறுதியாக படம் மக்களை சந்திக்கப் போகிறது. இதனால் நன்றி உணர்வுடன் இருக்கிறேன்” என்றுள்ளார். இத்தனை வருடங்கள் கழித்து முடங்கிகிடந்த ஒரு படம் வெளியாக தயாராகியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/08-24-2026-01-23-16-41-00.jpg)