ராகவா லாரன்ஸ் தற்போது பென்ஸ், ஹண்டர், புல்லட் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் காஞ்சனா 4 படத்தை நடிப்பதோடு இயக்கியும் வருகிறார். திரைத்துறையைத் தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி ரஜினிகாந்தை சந்தித்து இருந்தார். அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் ரஜினியுடன் சில மாதங்கள் கழித்து அருமையான நேரத்தை செலவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் மேலும் அவருடன் பகிர்ந்த ஒவ்வொரு தருணத்தையும் உண்மையாக போற்றுவேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாள் காண்கிறார் ராகவா லாரன்ஸ். இதனை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் மற்றும் அவரது உதவியால் வாழும் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது ராகவா லாரன்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் வாழ்த்திய ஆடியோவையும் பகிர்ந்து ரஜினிகாந்துக்கு நன்றியும் கூறியுள்ளார். அதாவது “இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரஜினிகாந்த் அவருடைய வாழ்த்தை காலையிலேயே எனக்கு அனுப்பி எனது பிறந்தநாளை ஸ்பெஷல் ஆக மாற்றி உள்ளார். அவருடைய குரல் உண்மையாகவே இந்த நாளை அர்த்தமுள்ளாக்குகிறது. அவருடைய ஆசீர்வாதத்துக்கும் அன்புக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/10-5-2025-10-29-16-02-30.jpg)