இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் 18ஆம் தேதி வரை மொத்தம் எட்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த விழா வழக்கம்போல் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
விழாவின் தொடக்க விழா 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு சத்தியம் திரையரங்கில் தொடங்குகிறது. நிறைவு விழா அதே அரங்கில் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இடைப்பட்ட நாட்களில் சத்தியம் திரையரங்கத்தை தவிர்த்து சிட்டி சென்டரில் உள்ள பிவிஆர் திரையரங்கிலும் விழா தொடர்கிறது. இந்த வருடம் 13 விருதுகள் கொடுக்கப்படுகிறது. மேலும் 51 நாடுகளிலிருந்து மொத்தம் 122 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
இதில் தமிழ் திரைப்படப் பிரிவில் மொத்தம் 12 படங்கள் போட்டியிடுகிறது. இதில் 3 பிஹெச்கே, அலங்கு, பிடிமண், காதல் என்பது பொதுவுடமை, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, டூரிஸ்ட் பேமிலி மற்றும் வேம்பு ஆகிய படங்கள் அடங்கும். இதில் சிறப்பம்சமாக பாட்ஷா படம் திரையிடப்படுகிறது. அதாவது ரஜினியின் 50 ஆண்டுகால சினிமா பங்களிப்பை போற்றும் விதமாக மற்றும் பாட்ஷா படத்தின் 30 ஆண்டு கால பயணைத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் 60 ஆண்டு கால பயணத்தையும் கொண்டாடும் விதமாகவும் திரையிடப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/12-15-2025-12-08-19-44-16.jpg)