திரைத்துறையில் தனது ஸ்டைலாலும் துடிப்பான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகம் படம் மூலம் 1975 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்த அவர் பின்பு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக இன்றளவும் இருக்கிறார். இப்போது கைவசம் ஜெயிலர் 2 படம் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் கமலுடன் இணைந்து நடிக்கும் ஒரு படம் என வைத்துள்ளார். தனது 75 வது வயதிலும் தொடர்ந்து துடிப்பாக நடித்து வரும் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50ஆவது ஆண்டில் பயணித்து வருகிறார்

Advertisment

இவரது ஐம்பதாவது ஆண்டு திரைப்படத்தை முன்னிட்டு அவருக்கு விழா எடுக்க அவர்கள் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் அதை பரிசலீத்து வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பேட்டி கொடுத்திருந்தார். அடுத்த மாதம் அவரது பிறந்த நாள் வருவதால் அந்த விழா நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த சூழலில் ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் அவரது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு கௌரவிப்பு நடக்கவுள்ளது. கோவாவில் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நிறைவு நிகழ்ச்சி நாளில் ரஜினிகாந்துக்கு கௌரம் அளிக்கப்படும் என அவ்விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

1952-ல் நிறுவப்பட்டு 2004 முதல் கோவாவில் நடக்கும் படி நிரந்தரமாக திட்டமிடப்பட்டது இந்திய சர்வதேச திரைப்பட விழா. 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கோவாவில் இந்த திரைப்பட விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதே வேளையில் தங்கமயில், வெள்ளிமயில் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தங்கமயில் விருதுக்கு போட்டியிடுகிறது.