Advertisment

ஜெயலலிதா தான் நீலாம்பரியா? படையப்பா 2 உருவாகுமா? - மனம் திறந்த ரஜினி

18 (33)

ரஜினியின் 75வது பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அவரது சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜிகணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, மணிவன்னன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.  

Advertisment

25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக ரஜினி, படம் குறித்து தனது சுவாரசியமான அனுபவங்களை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஏகப்பட்ட விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது நீலாம்பரி கதாபாத்திரம் குறித்து பேசுகையில், “படம் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருந்தபோது, 96, 97 காலகட்டத்தில் நான் ஜெயலலிதாவை எதிர்த்ததை வைத்து நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று ஒரு புரளி கிளம்பியது. 

Advertisment

படம் ரிலீஸ் ஆனபிறகு அன்றைய சிஎம் கலைஞர் பார்த்துவிட்டு பாராட்டினார். அதனால் ஜெயலலிதாவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சில பேர் வேண்டாம் என சொன்னார்கள். இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு ரீல் எல்லாம் அனுப்பி விட்டோம். அவரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டினார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்றார். 

தொடர்ந்து படையப்பா இரண்டாம் பாகம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், “2.o, ஜெயிலர் 2 என படங்கள் உருவாகும் போது ஏன் படையப்பா 2 பண்ணக்கூடாது என யோசித்தேன். ஏனென்றால் அடுத்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்குவேன் என நீலாம்பரி சொல்லியிருக்கிறார். அதனால் டைட்டில் நீலாம்பரி. அது குறித்து கதை விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அது நன்றாக வந்தால் கண்டிப்பாக படையப்பா 2 உருவாகும். 

இப்படத்தை நானே தயாரித்ததால் அன்றைய நாட்களில் எந்த ஓடிடிக்கும் சாட்டிலைட் சேனலுக்கும் கொடுக்கவில்லை. சன் டிவிக்கு மட்டும் இரண்டு முறை டெலிகேஸ்ட் பண்ணக் கொடுத்தேன். ஏனென்றால் திரையரங்கில் மக்கள் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம். அப்படிப்பட்ட ஒரு படம் என்னுடைய 50வது ஆண்டு திரைப்பயணத்தில் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது” என்றார்.   

Actor Rajinikanth jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe