ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார். 

Advertisment

இந்த நிலையில் ரஜினிக்கு கோவாவில் நடந்து வரும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவரது 50 ஆண்டு கால திரை பயணத்தை முன்னிட்டு கௌரவிக்கப்படுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றுள்ளார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயிலர் 2 தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஷூட்டிங் நல்லா போயிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் இருக்கு” என்றார். பின்பு விருது வாங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எல்லாமே உங்க ஆசீர்வாதம் தான்” என்றார்.

Advertisment

பின்பு அவரிடம் இன்று துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாள் என தெரிவித்த போது, “அவருக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார். உடனே அவரிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தவெக-வில் இணைந்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நோ கமெண்ட்ஸ்” என முடித்துக் கொண்டார்.