திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த் இன்று 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கமல், மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

Advertisment

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார். அவருக்கு படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment

ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தை தொடர்ந்து கம தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலுடன் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளார்.